லேசா லேசா பட நடிகர் கவலைக்கிடம் - தீவிர சிகிச்சையில் அனுமதி..!!
லேசா லேசா பட நடிகர் கவலைக்கிடம் - தீவிர சிகிச்சையில் அனுமதி..!!

மலையாளத் திரையுலகின் பிரபல நடிகரும், இயக்குநருமான ஸ்ரீனிவாசன் சில தினங்களுக்கு முன்பு இருதயத்தில் ஏற்பட்ட தொந்தரவு காரணமாக அங்கமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 66 வயதாகும் ஸ்ரீனிவாசனின் இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.தற்போது ஸ்ரீனிவாசன் வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தமிழில் பிரியதர்ஷன் இயக்கிய லேசா லேசா திரைப்படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்திருப்பார்.
இவர் ஏராளமான மலையாள படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்துள்ளார். மலையாள பட உலகில் சூப்பர்ஸ்டார்களாக உள்ள மோகன்லால், மம்முட்டி முதல் இளம் நடிகர்கள் வரை இணைந்து நடித்துள்ளார்.

