Theme Check

கொரோனாவால் குறைந்த ஆணுறைகள் விற்பனை.. வெளியான புதிய தகவல் !!

கொரோனாவால் குறைந்த ஆணுறைகள் விற்பனை.. வெளியான புதிய தகவல் !!

கொரோனாவால் குறைந்த ஆணுறைகள் விற்பனை.. வெளியான புதிய தகவல் !!
X

கொரோனா காரணமாக சுமார் இரண்டு ஆண்டுகளாக பொதுமுடக்கம் நாடு முழுவதும் அமலில் இருந்தது. இக்காலக்கட்டத்தில் அனைவரும் வீடுகளில் இருந்ததால் தம்பதி இடையே நெருக்கம் ஏற்பட்டது. இதனால் வழக்கத்தைவிட அதிகமான பெண்கள் கருவுற்றதாக ஏற்கனவே தகவல் வெளிவந்தது.

இந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று பாதித்த 2020-21 ஆம் ஆண்டில், மிக அதிக அளவில் பயன்படுத்தப்படும் கருத்தடை சாதனமான ஆணுறைகள், நாட்டில் மிகக்குறைந்த அளவே விற்பனையானதாக மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தியாவில் கருத்தடைச் சாதனமான ஆணுறைகள் விற்பனையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவே மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

sex couple

கொரோனா காலத்தில் விதிக்கப்பட்டிருந்த எண்ணற்ற கட்டுப்பாடுகள்தான் இந்த விற்பனை பாதிப்புக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர கௌர் என்பவர் தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.

sex couple

கொரோனா முதல் அலையின் தீவிர பரவல் காரணமாக, இந்தியாவில் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்த நிலையில், 2020-21 நிதியாண்டில் 24.431 கோடி ஆணுறைகள் மட்டுமே விற்கப்பட்டுள்ளன என்று அரசுத் தகவலை மேற்கோள் காட்டித் தெரிவித்துள்ளார் கௌர்.
இந்த அளவுக்குக் குறைவான எண்ணிக்கையில் ஆணுறைகள் விற்கப்பட்டிருப்பதன் காரணமாக, இந்தக் காலகட்டத்தில் 10 மடங்கிற்கும் அதிகமான அளவில் தேவையற்ற கருத்தரிப்புகள் நேர்ந்திருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it