தமிழகத்தில் 1000க்கும் கீழ் குறைந்த கொரோனா!!
தமிழகத்தில் 1000க்கும் கீழ் குறைந்த கொரோனா!!

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் குறைந்ததுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி ஒரு நாள் பாதிப்பு 890 ஆக பதிவாகி இருந்தது. அதன்பின்னர் தினசரி பாதிப்பு ஆயிரத்தை தாண்டி, ஜனவரி 21ஆம் தேதி ஒருநாள் பாதிப்பு 30,178 என்ற உச்சத்தை அடைந்து பின்னர் படிப்படியாக குறையத் தொடங்கியது.
பாதிப்பு உச்சத்தை தொட்டபோது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வார இறுதி நாட்களில் ஊரடங்கு, வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் வழிபாட்டுத் தலங்கள் திறப்பதற்கு தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டன.
ஜனவரி மாத இறுதியில் கொரோனா பாதிப்புகள் குறையத் தொடங்கியதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. தற்போது மாஸ்க் அணிதல், தனி நபர் இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை தவிர மற்ற கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 949 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பு 1051 ஆக இருந்த நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளது.
மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 44ஆயிரத்து 929 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 3,172 பேர் சிகிச்சைக்கு குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 91 ஆயிரத்து 041 ஆக உயர்ந்துள்ளது.
newstm.in

