சென்னைக்கு வடக்கே லேசான நில அதிர்வு!!
சென்னைக்கு வடக்கே லேசான நில அதிர்வு!!

சென்னைக்கு வடக்கே திருப்பதி அருகே இன்று அதிகாலை 1.10 மணிக்கு 3.6 என்கிற குறைவான ரிக்டர் அளவுகோளில் நில அதிர்வு பதிவாகியுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதியிலிருந்து 85 கிலோமீட்டர் வடகிழக்கில் நள்ளிரவு 1 மணிக்கு நில அதிர்வுகள் ஏற்பட்டன. இது ரிக்டர் அளவு கோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது.
நில அதிர்வு உணரப்பட்ட பகுதி சென்னைக்கு வடக்கே 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த நில அதிர்வு ஏற்படுத்திய சேத விவரங்கள் ஏதும் தெரியவில்லை. எனினும் நள்ளிரவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வால் அப்பகுதி மக்களிடையே அச்சம் நிலவியது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி காக்கிநாடா , சென்னை, குண்டூர், திருப்பதி ஆகிய இடங்களில் லேசான நில அதிர்வுகள் ஏற்பட்டன.
அன்றைய தினம் சுமார் மதியம் 12.35 மணிக்கு சென்னையின் அடையாறு, பெசன்ட் நகர், ஆழ்வார்பேட்டை, அண்ணா நகர், திநகர், நுங்கம்பாக்கம், ஆலந்தூர், அம்பத்தூர், மயிலாப்பூர், மாதவரம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
newstm.in

