Theme Check

லோன் ஆப் மோசடி.. ஆசை கும்பலின் அந்தரங்க மிரட்டலுக்கு ஆளாகும் மக்கள் !!

லோன் ஆப் மோசடி.. ஆசை கும்பலின் அந்தரங்க மிரட்டலுக்கு ஆளாகும் மக்கள் !!

லோன் ஆப் மோசடி.. ஆசை கும்பலின் அந்தரங்க மிரட்டலுக்கு ஆளாகும் மக்கள் !!
X

வணக்கம் சார்.. வணக்கம் மேடம்.. உங்களுக்கு உடனே பணம் வேண்டும் ஓரு போன் இருந்தால் போதும் உடனே பணம்! உங்களுக்கு லோன் வேண்டுமா! என அனைவரின் செல்போனுக்கும் குறுஞ்செய்தி மற்றும் போன் வரும். எதிர்தரப்பில் இனிமையான குரலில் ஒரு பெண் பேசி இவ்வாறு கேட்பார். மேலும் உடனடி லோன் என்ற கவர்ச்சிகரமான விளம்பரத்துடன் பல லோன் ஆப்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

ஈசியான முறையில் பணம் பெறாலாம் என அதை நம்பி குறிப்பிட்ட சில ஆப்பை பலர் பதிவிறக்கம் செய்கின்றனர். பதிவு செய்யும்போது, ஆதார் அட்டை நகலை கேட்கும், செயல்படுவதற்கு சில அனுமதிகளை கேட்கும், அவற்றிற்கு அனுமதி கொடுத்தால் போதும், உடனே கடன் தொகை உங்களது வங்கி கணக்கிற்கு வந்துவிடும். இதில் எந்த பிரச்சனையும் இருக்காது.

money

ஆனால் உண்மையில் அதற்கு பிறகு தான் அதிக ஆபத்து இருக்கின்றது. நாம் கேட்கும் தொகையில் பாதி தொகையை வட்டியாக எடுத்துக்கொண்டு மீதி தொகையை மட்டும் கொடுக்கும் இந்த லோன் ஆப் நிறுவனங்கள் பெற்ற தொகையை இரட்டிப்பாக ஒரு வாரத்திற்குள் கட்ட வேண்டும் நிர்பந்திக்கின்றனர் என கூறுகின்றனர், இந்த ஆப் மூலம் பணம் பெற்று பாதிக்கப்பட்டவர்கள்.

கடனாக பெற்ற தொகையை இரட்டிப்பாக கட்ட தவரும் பட்சத்தில் கடன் பெற்றவர்களுக்கு ஆபாச மிரட்டல் கொடுக்க தொடங்குகின்றன ஆந்த லோன் ஆப் நிறுவனங்கள். மேலும் ஆபாச குறுஞ்செய்தியும், பணம் பெற்றவரின் புகைப்படங்களை தவறாக சித்தரித்தும் அனுப்பி மிரட்டலை தொடங்குகின்றனர். இதற்கும் மேலாக லோன் பெற்றவரின் செல்போனில் இருந்து அவர்களின் நண்பர்கள், பெற்றோர், உறவினர்கள் செல்போன் எண்களை திருடும் இந்த லோன் நிறுவனங்கள் அவர்களுக்கும் ஆபாச புகைப்படங்களை சித்தரித்து அனுப்புகின்றனர்.

money

கடன் செயலி மோசடி குறித்து போலீசாரிடம், புகார் கொடுக்கப்பட்டாலும், குற்றவாளிகளை கைது செய்வதில் நடைமுறை சிக்கல் இருப்பதாக கூறுகிறார்கள் வல்லுநர்கள். அவசர பணத்தேவைகள் அனைவருக்கும் ஏற்படுவது இயல்பு தான் ஆனால் நமது தேவை அறிந்தே இது போன்ற மோசடி செயலிகளும் மோசடிகளில் ஈடுபடுகின்றன. இதில் அதிகம் சிக்கி பாதிக்கப்படுவது இளைஞர்கள் தான் என கூறப்படுகிறது. எனவே இதில் எச்சரிக்கையாக இருந்து இந்த மோசடியில் சிக்காமல் இருப்பதே சிறந்தது என காவல்துறையினர் கூறுகின்றனர்.

newstm.in

Next Story
Share it