Theme Check

உள்ளாட்சி தேர்தல் : வங்கிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!!

உள்ளாட்சி தேர்தல் : வங்கிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!!

உள்ளாட்சி தேர்தல் : வங்கிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!!
X

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள பகுதிகளில் வரும் 19ஆம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு, வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

வாக்காளர்கள் ஓட்டு போட வசதியாக, தேர்தல் நடைபெறும் பகுதிகளில், அன்றைய தினம் பொது விடுமுறை அறிவித்து, தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

bank

எனவே, தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள வங்கி அலுவலகங்கள், கிளைகளுக்கு 19ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது. பிற பகுதிகளில் உள்ள வங்கி அலுவலகங்கள் மற்றும் கிளைகள் வழக்கம் போல செயல்படும் என கூறப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it