இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 16-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!!
இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 16-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!!

உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு, வரும் 16-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுவதால் மதுரை மாவட்டத்திற்கு வரும் 16-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். ஏப்-16ல் கருவூலங்கள், சார்நிலை கருவூலங்கள் குறைந்த அளவு ஊழியர்களுடன் செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Next Story

