ஆகஸ்ட் 10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு...!!
ஆகஸ்ட் 10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு...!!

தமிழகத்தில் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறையை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்து வருகின்றனர்.அந்தவகையில் சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு 12 நாட்கள் நடைபெறும் விழாவில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அதனால் தென்காசி மாவட்டத்தில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விட இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன் படி ஆகஸ்ட் 10 ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த தேதியில் அரசு பொதுத்தேர்வுகள் இருந்தால் சம்மந்தப்பட்ட பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதத்தில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

