Theme Check

வரும் 18-ம் தேதி உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

வரும் 18-ம் தேதி உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

வரும் 18-ம் தேதி உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!
X

அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சியில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோவில் பெருந்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீராம நவமி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த 2 வருடமாக இந்த கோவிலில் திருவிழா நடைபெறவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து இந்த ஆண்டு திருவிழா சிறப்பாக நடப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ‘தென்னகத்தின் சின்னத் திருப்பதி’ என அழைக்கப்படும் அரியலூர் கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயிலின் பத்து நாள் திருவிழா கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான 9- ம் திருநாளான வருகின்ற 18-ம் தேதி அதிகாலை வரதராஜப்பெருமாள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெறவுள்ளது.

இதை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வரும் 18-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Next Story
Share it