Theme Check

ஒரு தலை காதலால் கோவை இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட நிலையை பாருங்க..!!

ஒரு தலை காதலால் கோவை இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட நிலையை பாருங்க..!!

ஒரு தலை காதலால் கோவை இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட நிலையை பாருங்க..!!
X

கோவையை சேந்தவர் லட்சுமி. இவருக்கு வயது 21. இவர் லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள தனியார் கார் நிறுவனத்தில் பைனான்ஸ் துறையில் பயிற்சி பெற்று வருகிறார். இவருக்கு சேலம் மாவட்டம் நெத்திமேடு பகுதியில் வசித்து வரும் தினேஷ் (26) என்ற இளைஞருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமாகி உள்ளார்.

1

லட்சுமி, தினேஷ் இருவரும் இன்ஸ்டாவில் சாட்டிங் மூலம் பேசி நட்பை வளர்த்துள்ளனர். இது நாளடைவில் அந்த பெண்ணை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை தினேசுக்கு தோன்றியது. இதனால் தினேஷ் லட்சுமியிடம் உன்னை வேண்டும் எனக் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து கோவை வந்த தினேஷ் லட்சுமியை சந்தித்துள்ளார். பின்னர் தனது காதலையும் வெளிப்படுத்தி இருக்கிறார். திடீரென்று தினேஷ் காதலிப்பதாக கூறியதால் லட்சுமி அதிர்ச்சியடைந்து அவரின் காதலை ஏற்க மறுத்துள்ளார்.

love

பின்னர் செல்போனில் அவரது எண்ணை ப்ளாக் செய்து தினேஷ் உடனான தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தினேஷ், லட்சுமி பணிபுரியும் தனியார் கார் நிறுவனத்திற்கு சென்று தனது காதலை ஏற்றுக் கொள்ளும்படி மிரட்டல் விடுத்துள்ளார்.

அப்படியும் லட்சுமி காதலை ஏற்க மறுத்து திட்டியதால், தினேஷ் தான்மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரின் முகம், தோள்பட்டை, தலை பகுதியில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோட முயற்சித்தார். லட்சுமியின் அலறல் சத்தம் கேட்ட சக ஊழியர்கள் விரைந்து வந்து தினேஷை மடக்கிப் பிடித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தார்கள்.

Police-arrest

காயமடைந்த லட்சுமியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தினேஷை கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யததுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் தினேஷ் சிறையில் அடைக்கப்பட்டார். ஒருதலை காதல் பிரச்சினையால் இளைஞர் இளம் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story
Share it