Theme Check

கல்லூரி பெண்ணுக்கு ஏற்பட்ட நிலையை பாருங்க..!!

கல்லூரி பெண்ணுக்கு ஏற்பட்ட நிலையை பாருங்க..!!

கல்லூரி பெண்ணுக்கு ஏற்பட்ட நிலையை பாருங்க..!!
X

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மங்காரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீலட்சுமி (19). இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிசிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த மே மாதம் 30-ம் தேதி ஸ்ரீலட்சுமியை பக்கத்து வீட்டில் உள்ள நாய் கடித்துள்ளது. இதனையடுத்து ரேபிஸ் தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்ட ஸ்ரீலட்சுமிக்கு ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் தென்படவில்லை.

dog-bite

அதன் பின்னர், அவருக்கு ரேபிஸ் நோய் அறிகுறிகள் தென்படத் தொடங்கியபோது, பாலக்காட்டில் உள்ள மங்காராவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இரண்டு நாட்களுக்கு முன்பு ஸ்ரீலட்சுமிக்கு கடுமையான நிமோனியா காய்ச்சலால் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவருக்கு ரேபிஸ் நோய்க்கான அனைத்து அறிகுறிகளும் இருப்பதாகவும், அதற்கான சிகிச்சையைத் தொடங்கியதாகவும் மருத்துவமனை கூறியது. இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் ஸ்ரீலட்சுமி உயிரிழந்தார்.

ஸ்ரீலட்சுமியை நாய் கடிக்க முயன்றபோது, ​​அதன் உரிமையாளர் தடுக்க முயன்றூள்ளார். அப்போது அவரையும் அந்த நாய் கடித்துள்ளது. ஆனால் அவருக்கு இதுவரை உடல்நலக் கோளாறுகள் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. கேரளாவில் இந்த ஆண்டு மட்டும் வெறி நாய் கடியால் ஸ்ரீலட்சுமி உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

dead-body

ரேபிஸ் நோய்க்கு சுகாதாரத்துறை பரிந்துரைத்த 4 தடுப்பூசிகளையும் ஸ்ரீலட்சுமிக்கு செலுத்தப்பட்டதாக அவரது உறவினர்கள் கூறுகின்றனர். மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், சிலருக்கு தடுப்பூசி போட்டாலும் ரேபிஸ் நோய் வரக்கூடும் என்று சில சுகாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். இது குறித்து விரிவான ஆய்வு மற்றும் விசாரணையை சுகாதாரத்துறை தொடங்கி உள்ளது.

Next Story
Share it