கொடுத்த பணத்தை திரும்பி கேட்ட இளைஞரை 24 வயது இளம்பெண் செய்த செயலை பாருங்க..!!
கொடுத்த பணத்தை திரும்பி கேட்ட இளைஞரை 24 வயது இளம்பெண் செய்த செயலை பாருங்க..!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (26) வசித்து வந்தார். தனியார் தொழிற்சாலையில் பணி புரிந்து வந்த இவர், கடந்த மே மாதம், 28-ம் தேதி முதல் காணவில்லை என, கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர்.

இந்த நிலையில், மாயமான மாரிமுத்து, விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே, தலவாய்புரம் பகுதியில் உள்ள ஏரியில், அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய மணிமுத்தாறு பட்டாலியன் போலீஸ் வில்வதுரை (27), மற்றும் அவரது நண்பர்களான இசக்கிராஜா (30), ரவிகுமார் (30), இசக்கிராஜாவின் மனைவி இளவரசி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
முக்கிய குற்றவாளியான கோவில்பட்டி பகுதியை சேர்ந்த ராகினி (24), என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். முகநுால் நட்பின் மூலம், ராகினிக்கு வழங்கிய, ரூ 5 லட்சம் பணத்தை மாரிமுத்து திருப்பி கேட்டுள்ளார். இதனால் பணம் கேட்டு தொல்லை கொடுத்த மாரிமுத்துவை, தீர்த்து கட்ட வேண்டும் என, போலீஸ் நண்பரான வில்வதுரையிடம் ராகினி தெரிவித்துள்ளார்.

அதன்படி, பணம் திருப்பி தருவதாக ராகினி கூறியதையடுத்து, கடந்த மே மாதம் 30-ம் தேதி, மாரிமுத்து திருநெல்வேலிக்கு சென்றார். அங்கு போலீஸ் வில்வதுரை மற்றும் அவரது நண்பர்கள் மாரிமுத்துவை காரில் கடத்தி சென்று, சங்கரன் கோவிலில் கொலை செய்து ராஜபாளையம் கண்மாய் பகுதியில் வீசியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
மாரிமுத்து மாயமானது குறித்து, கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிந்த நிலையில், அதை கொலை வழக்காக மாற்றம் செய்து, கைதான4 பேரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள ராகினியை, சிப்காட் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

