குடிமகனுக்கு வந்த சோதனையை பாருங்க..!! 2 பாட்டில் குடித்தும் போதை ஏறல - உள்துறை அமைச்சரிடம் புகார்..!!
குடிமகனுக்கு வந்த சோதனையை பாருங்க..!! 2 பாட்டில் குடித்தும் போதை ஏறல - உள்துறை அமைச்சரிடம் புகார்..!!

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் பகதூர்கஞ்ச் பகுதியில் வசித்து வந்த லோகேந்திர சாதியா என்ற லோகேஷ், கடந்த ஏப்ரல் 12-ந் தேதி கடைக்கு சென்று 4 மது பாட்டில்களை வாங்கியுள்ளார்.
மது பழக்கத்தை அடிமையான லோகேஷ், அவற்றில் 2 மது பாட்டில் முழுவதையும் குடித்தும் போதை ஏறாத நிலையில், இதுகுறித்து மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா, கலால் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், இது கலப்பட மதுபானம் என சந்தேகிக்கிறேன். இரண்டு பாட்டில்கள் குடித்தும் போதை ஏறவில்லை என தெரிவித்துள்ளார். அதற்கு சான்றாக, அவர் வாங்கி வைத்திருந்ததில் மீதமிருந்த மதுபாட்டில்களையும் கலால் துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அந்த மதுபாட்டில்களில் தண்ணீரே உள்ளது என்றும் அதனை அதிகாரிகள் ஆய்வு செய்து ஒப்பந்ததாரருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.
முன்னதாக, இதுகுறித்து கடை ஊழியர்களிடம் கேட்டு போது உன்னால் என்ன முடியுமோ அதனை செய்து கொள் என அவர்கள் லோகேஷிடம் கூறியுள்ளனர்.
இதனால், அடுத்த கட்ட நடவடிக்கையாக லோகேஷ் நேராக அமைச்சருக்கே புகார் கடிதம் அனுப்பியுள்ளார். இந்த புகார் பற்றி கலால் துறை அதிகாரி ராம்ஹன்ஸ் பசோரி கூறும்போது, இந்த விவகாரத்தில் நாங்கள் இன்னும் புகாரை பெறவில்லை. புகார் பெற்ற பின்னர் குற்றம் கண்டறியப்பட்ட நபர்கள் மீது நாங்கள் கடும் நடவடிக்கை எடுப்போம் என கூறியுள்ளார்.

