Theme Check

இயக்குநர் லீனா மணிமேகலைக்கு லுக் அவுட் நோட்டீஸ்!!

இயக்குநர் லீனா மணிமேகலைக்கு லுக் அவுட் நோட்டீஸ்!!

இயக்குநர் லீனா மணிமேகலைக்கு லுக் அவுட் நோட்டீஸ்!!
X

கனடா முழுக்க சினிமா படிக்கும் மாணவர்களில் சிறந்தவர்கள் சிலரை தேர்தெடுத்து கனடா நாட்டின் பன்முக கலாசாரத்தை பற்றிய படங்களை எடுக்கும் முகாமில் பங்கெடுக்க `டோரோண்டோ மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகம்' லீனா மணிமேகலைக்கு அழைப்பு விடுத்தது.

அந்த முகாமில் கலந்துக் கொண்டு தனது பங்களிப்பாக காளி என்ற படத்தை அவர் எடுத்துள்ளார். காளியாக அவரே நடித்து இயக்கி தயாரித்துள்ளார். ஒரு மாலைப்பொழுது, டோரோண்டோ மாநகரத்தில காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள் தான் படம்.

kaali

அந்த ஆவணப்படத்தின் போஸ்டரில் காளி சிகரெட் பிடிப்பது போன்று இடம்பெற்றுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் லீனா மணிமேகலை மீது டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

கனடாவில் வெளியிடப்பட்ட இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் புயலை கிளப்பி உள்ளது. இது தொடர்பாக லீனா மணிமேகலை மீது டெல்லி, உத்தரபிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர் இந்த நிலையில் இயக்குநர் லீனா மணிமேகலைக்கு போபால் போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it