இனி தங்கம் வாங்குவது கஷ்டம் தான் போல..!! 39 ஆயிரத்தை தொட்ட தங்கம் விலை..!!
இனி தங்கம் வாங்குவது கஷ்டம் தான் போல..!! 39 ஆயிரத்தை தொட்ட தங்கம் விலை..!!

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 616 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.39,000-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 77 ரூபாய் உயர்ந்து, ரூ.4,875-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 70,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,900 ரூபாய் உயர்ந்து ரூ.71,900-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.71.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் அதன் தாக்கத்தால் கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்தன. பங்குச்சந்தைகள் சரிவடைந்தன. தங்கம் விலை பொறுத்தவரை கடுமையாக உயர்ந்து வருவது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே சமையல் ரீபைண்ட் ஆயில், பாமாயில், கடலெண்ணெய் போன்றவைகளின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது

