Theme Check

ஏரி மீன் ஏற்படுத்திய இழப்பு.. சோகத்தில் மூழ்கிய ஒட்டுமொத்த கிராம மக்கள் !!

ஏரி மீன் ஏற்படுத்திய இழப்பு.. சோகத்தில் மூழ்கிய ஒட்டுமொத்த கிராம மக்கள் !!

ஏரி மீன் ஏற்படுத்திய இழப்பு.. சோகத்தில் மூழ்கிய ஒட்டுமொத்த கிராம மக்கள் !!
X

செஞ்சி அருகே இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைடுத்த சோழங்குணம் கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவரின் மகன் மோகனராமன் (10), வெங்கடேஷ் என்பவரின் மகன் தாஸ் (7). சிறு வயதிலும் நெருங்கிய தோழர்களான இருவரும் சோழங்குணம் கிராமத்தில் அமைந்துள்ள எரிக்கு யில் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது சிறுவர்கள் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
water
ஆனால், பெற்றோர் சிறுவர்களை காணவில்லை என பல பகுதிகளில் தேடிப்பார்த்துள்ளனர். உறவினர்கள், நண்பர்களின் வீடுகள் என அனைத்து இடங்களிலும் தேடி பார்த்தப்போதும் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவர்கள் ஏரி பகுதியில் தேடி பார்த்துள்ளனர். அப்போது, சிறுவர்களின் சடலம் ஏரியில் மிதந்துள்ளது. இதைக் கண்ட பெற்றோரும் பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சிறுவர்களின் சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த வளத்தி காவல் துறையினர் சிறுவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிறுவர்களின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் சோழக்குணம் கிராமத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


newstm.in


Next Story
Share it