Theme Check

குவியும் பாராட்டுக்கள்..!! ஒரு தங்கம் மற்றும் 2 வெண்கலப் பதக்கம் வென்ற 94 வயது மூதாட்டி!!

குவியும் பாராட்டுக்கள்..!! ஒரு தங்கம் மற்றும் 2 வெண்கலப் பதக்கம் வென்ற 94 வயது மூதாட்டி!!

குவியும் பாராட்டுக்கள்..!! ஒரு தங்கம் மற்றும் 2 வெண்கலப் பதக்கம் வென்ற 94 வயது மூதாட்டி!!
X

பின்லாந்தில் 35 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்ற 94 வயதான பகவானி தேவி தாகர், ஒரு தங்கம் மற்றும் 2 வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

Bhagwani Devi Dagar

இவர் பங்கேற்ற 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் 24.74 வினாடிகளில் கடந்த அசத்தினர். அத்துடன் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார். அதன்பின்னர் குண்டு எறிதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். மேலும் இவர் ஈட்டி எறிதல் போட்டியிலும் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

பகவானி தேவி இதற்கு முன்னரே, சென்னையில் நடைபெற்ற மூத்தோர் தடகள தொடரில், 3 தங்க பதக்கங்களை வென்றிருந்தார். அதேபோல அதற்கு முன் டெல்லியில் நடைபெற்ற தடகள சாம்பியன்ஷிப்பில் 100 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் ஆகியவற்றில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார்.

பின்லாந்தில் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் ஒலிம்பிக்குக்கு இணையாக பார்க்கப்படுகிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் ஒலிம்பிக் போட்டிகளை விட அதிக வீரர்கள் இந்த தொடரில் கலந்து கொள்கிறார்கள்.

சர்வதேச பாரா தடகள வீரரும், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவருமான விகாஸ் தாகர், பகவானி தேவியின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story
Share it