Theme Check

திருமணமான 4 மாதத்தில் காதல் தம்பதி தற்கொலை!!

திருமணமான 4 மாதத்தில் காதல் தம்பதி தற்கொலை!!

திருமணமான 4 மாதத்தில் காதல் தம்பதி தற்கொலை!!
X

சேலத்தில் காதல் மனைவி தற்கொலை செய்து கொண்டதால், காதலனும் ரயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொண்டலாம்பட்டி கலர்காடு பகுதியை சேர்ந்த இருசக்கர வாகன மெக்கானிக் ரவிக்குமார், அதே பகுதியை சேர்ந்த சரண்யா என்ற இளம்பெண்ணை காதலித்து வந்த நிலையில், 4 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் சரண்யாவிற்கும் ரவிக்குமாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. பின்னர் ரவிக்குமார் வழக்கம்போல் பணிக்கு சென்றுவிட்டார்.இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த சரண்யா தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

slm

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் விரக்தி அடைந்த சரண்யாவின் உறவினர்கள் ரவிக்குமாரை தாக்கி மருத்துவமனையிலிருந்து வெளியேற்றினர்.

இதனால் அவமானம் அடைந்த ரவிக்குமார் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். சரக்கு ரயில் அவர் மீது ஏறியதில் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பலியானார்.

death

இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.காதல் திருமணம் செய்து நான்கு மாதமே ஆன இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it