காதல் மனைவி கொலை.. காட்டிக் கொடுத்தது கணவனின் போதை..!
காதல் மனைவி கொலை.. காட்டிக் கொடுத்தது கணவனின் போதை..!

கோவை மாவட்டம், காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகார்ஜுன். இவர் ஷர்மிளா என்ற பெண்ணை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு இரு வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கவே, ஐந்து மாதத்திற்கு முன்பு இருவரும் திருமணம் செய்துள்ளனர்.
இந்நிலையில், காதல் மனைவி மீது நாகர்ஜுன் சந்தேகம் அடைந்துள்ளார். இதனால், தம்பதிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
சம்பவத்தன்று, குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த நாகர்ஜுனா மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். ஷர்மிளாவும் பதிலுக்கு பேசியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நாகார்ஜுனா, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியை குத்திக் கொலை செய்துள்ளார்.
பின்னர் வீட்டை விட்டு வெளியே சென்று தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துள்ளார். அப்போது, போதையில் தனது மனைவியை கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
போலீசார் அவரது வீட்டிற்கு சென்று, ஷர்மிளாவின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து நாகார்ஜுனனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

