Theme Check

ஓட்டி பார்த்துவிட்டு வருவதாக கூறி புல்லட்டை ஓட்டி சென்று 75 நாட்கள் உல்லாச பயணம்.. சிக்கிய காதல் ஜோடி !

ஓட்டி பார்த்துவிட்டு வருவதாக கூறி புல்லட்டை ஓட்டி சென்று 75 நாட்கள் உல்லாச பயணம்.. சிக்கிய காதல் ஜோடி !

ஓட்டி பார்த்துவிட்டு வருவதாக கூறி புல்லட்டை ஓட்டி சென்று 75 நாட்கள் உல்லாச பயணம்.. சிக்கிய காதல் ஜோடி !
X

ஓட்டிப் பார்த்து விட்டு வருவதாக கூறி புல்லட்டுடன் மாயமான காதல் ஜோடியை பெங்களூருவில் போலீசார் மடக்கி பிடித்தனர்.

சேலம் டவுன் சாந்தி தியேட்டர் அருகே பைக் கன்சல்டிங் அலுவலகம் உள்ளது. இந்த நிறுவனத்துக்கு கடந்த ஜனவரி மாதம் 2 இளம் காதல்ஜோடியினர் சென்று புதிதாக புல்லட் பைக் ஒன்று வாங்கவேண்டும் என கூறியுள்ளனர். இதில் ஒரு ஜோடியினர் 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புல்லட்டை வாங்க விரும்புவதாக கூறியுள்ளனர். இதையடுத்து ஓட்டிப் பார்த்து விட்டு வருவதாக கூறி காதலர்கள் இருவரும் பைக்கில் சென்றுள்ளனர். ஆனால் அதன்பின்னர் திரும்பி வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த பைக் நிறுவனத்தினர் தேடி பார்த்தப்போதும் அவர்கள் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவர்கள் அளித்த புகாரின்பேரில், டவுன் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில், புல்லட்டுடன் தப்பியது பிரவீன் (25) என்பதும், மற்றொரு ஜோடி அரவிந்த் என்பதும் தெரிய வந்தது. பிரவீனுடன் சென்ற பிரீத்தி (25) என்ற இளம்பெண்ணின் பெற்றோரிடம் விசாரணை நடத்திய போலீசாரிடம், தங்களது மகள் தற்போது எங்கு இருக்கிறார் என தெரியாது என்று கூறிவிட்டனர்.

இந்நிலையில் புல்லட்டுடன் தப்பிய காதல்ஜோடியை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. தீவிர விசாரணைக்கு பிறகு கர்நாடக மாநிலம் பங்காருபேட்டை காரென்னஹள்ளியில் உள்ள வீட்டில் பிரவீன் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று அதிகாலை வீட்டிற்கு சென்ற போலீசார் பிரவீன் மற்றும் பிரீத்தி ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர்.

arrested

பின்னர் இருவரையும் போலீசார் சேலம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது, கைதான பிரவீன் மீது கிருஷ்ணகிரியில் 2 வழக்கும், தருமபுரியில் ஒரு வழக்கும் உள்ளது. கருப்பூரில் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு குற்றத்தை ஒப்புக்கொண்டதால் சிறை தண்டனை அனுபவித்து வெளியே வந்தார்.

அதன்பின் சேலம் காந்திரோட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார். அப்போது அங்கு பில்லிங் பிரிவில் பணியாற்றிய பிரீத்தியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் தான் புல்லட்டை திருடி தப்பிச்சென்றுள்ளனர்.

புது புல்லட்டுடன் கர்நாடகா சென்ற பிரவீனுக்கு அங்கு வாகன சோதனையில் போலீசாரிடம் சிக்கினார். போலீசார் காதல் ஜோடியை மடக்கி, வண்டிக்கான ஆவணங்களை கேட்டனர். அப்போது அது தமிழகத்தில் திருடிவிட்டு வந்தது தெரியவந்தது. வண்டியை பறிமுதல் செய்த போலீசார், பிரவீனை கைது செய்து சிறையில் அடைத்தனர். வண்டியின் எண்ணை வைத்து அதன் உரிமையாளரிடம் கர்நாடகா போலீசார் பேசிய போதுதான் பிரவீன் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டது தெரியவந்தது. இதற்கிடையே பரவீன் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். கர்நாடக போலீசார் கொடுத்த தகவலின்பேரில் சேலம் போலீசார் பெங்களூர் சென்று அதிரடியாக காதல் ஜோடியை கைது செய்தனர். இவ்வாறு போலீசார் கூறினர்.

newstm.in

Next Story
Share it