தமிழகத்தில் இன்றும் குறைந்த கொரோனா பாதிப்பு.. இந்த 24 மாவட்டங்களில் எந்த பாதிப்பும் இல்லை !!
தமிழகத்தில் இன்றும் குறைந்த கொரோனா பாதிப்பு.. இந்த 24 மாவட்டங்களில் எந்த பாதிப்பும் இல்லை !!

தமிழகத்தை பொறுத்தளவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இன்றும் சற்று குறைந்தே காணப்படுகிறது.
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 16,096 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் 1,30,651 மாதிரிகள் பரிசோதனை செய்யபட்டுள்ளது. மொத்தம் கொரோனா பாதிப்பு 33,61,316 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவுக்கு 35 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை பலியானோர் எண்ணிக்கை 37,599 ஆக உள்ளது. இதனிடையே, இன்று 24 மாவட்டங்களில் புதிய உயிரிழப்பு இல்லை என்பது மருத்துவத்துறை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

இன்று ஒரேநாளில் 25,592 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பாதித்த 33,61,316 பேரில் இதுவரை 31,35,118 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,88,599 ஆக குறைந்துள்ளது.
மாவட்டங்கள் அளவில், கடந்த 24 மணிநேரத்தில் சென்னை – 2348, கோயம்புத்தூர் – 2456, செங்கல்பட்டு – 1897, திருப்பூர் – 1297, சேலம் – 851, ஈரோடு – 924 பேர் என ஆகிய மாவட்டங்களில் அதிகபட்சமாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
newstm.in

