எம்.ஜி.எம் நிறுவனம் ரூ.400 கோடி வரி ஏய்ப்பு!!
எம்.ஜி.எம் நிறுவனம் ரூ.400 கோடி வரி ஏய்ப்பு!!

எம்ஜிஎம் நிறுவனம் 400 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வரிமான வரித்துறை தெரிவித்துள்ளது.
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் எம்.ஜி.எம் குழுமம் ஹோட்டல்கள், பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறது.
இந்நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வந்த புகாரை அடுத்து கடந்த 15 ஆம் தேதி எம்ஜிஎம் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

சென்னை, கோவை, ஹைதராபாத், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற ஆய்வில் வரி ஏய்ப்பு நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
சோதனையின் போது கணக்கில் வராத 3 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
newstm.in

