Theme Check

உதயநிதி படத்தின் மொத்த டிக்கெட்டையும் புக் செய்த எம்.எல்.ஏ!!

உதயநிதி படத்தின் மொத்த டிக்கெட்டையும் புக் செய்த எம்.எல்.ஏ!!

உதயநிதி படத்தின் மொத்த டிக்கெட்டையும் புக் செய்த எம்.எல்.ஏ!!
X

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி படம் வெளியாகும் முன்பே அனைத்து டிக்கெட்டுக்களையும் மானாமதுரை எம்.எல்.. தமிழரசி ரவிக்குமார் முன்பதிவு செய்தார்.

பாலிவுட்டில் வெளியாகி வெற்றி பெற்றஆர்ட்டிக்கள்15’ என்ற திரைப்படம்நெஞ்சுக்கு நீதிஎன்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. போனி கபூர் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார்.

இந்த படத்தை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரிவியூ தியேட்டரில் சில தினங்களுக்கு முன்னர் முதலமைச்சர் மு..ஸ்டாலின் பார்த்தார். பின்னர், உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

nn

இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் உற்சாகத்தோடு படத்தை கண்டுகளித்து வருகின்றனர். இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அமைந்துள்ள பிரியா திரையரங்கில் படம் வெளியாகி உள்ளது.

திமுகவை சேர்ந்த தற்போதைய மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் மாலை காட்சிக்கான அனைத்து டிக்கெட்டுக்களையும் முன்பதிவு செய்தார். இந்த டிக்கெட்டுகள் அனைத்தையும் இளைஞர்களுக்கும் கட்சி பிரதிநிதிகளுக்கும் இலவசமாக வழங்கினார்.

newstm.in

Next Story
Share it