நாடாளுமன்ற கூட்டத்தில் செல்போனில் ஆபாச படம் பார்த்த எம்பி ராஜிநாமா !!
நாடாளுமன்ற கூட்டத்தில் செல்போனில் ஆபாச படம் பார்த்த எம்பி ராஜிநாமா !!

பிரிட்டன் நாடாளுமன்ற கீழவை அமர்வின்போது செல்போனில் ஆபாச படத்தை பார்த்த நீல் பாரிஷ் எம்பி பதவியிலிருந்து விலகியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்தது தொடர்பான புகார் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நீல் பாரிஷ் ஆபாச படம் பார்த்ததை ஒப்புக்கொண்டார். நாடாளுமன்ற நிலைக்குழு ஆணையரிடம் ஆபாச படத்தை பார்த்ததாக ஒப்புக்கொண்ட நிலையில், நீல் பாரிஷை கன்சர்வேட்டிவ் கட்சி நீக்கியது. விசாரணை நடைபெறும் வரை, எம்பி பதவியில் தொடர்வேன் என அவர் கூறியிருந்த நிலையில், சனிக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
இதுகுறித்து பாரிஷ் பிபிசிக்கு பேட்டியளித்த அவர், இறுதியில், எனது குடும்பம், தொகுதி மக்கள் ஆகியோர் என்னால் கோபமடைந்திருப்பதையும் காயமடைந்திருப்பதையும் காண முடிந்தது. பதவியில் தொடரத் தகுதியற்றவன் என்பதையும் உணர்ந்தேன், என்றார்.
ஒரு இணையதளத்தில் டிராக்டர்கள் குறித்து தேடிக் கொண்டிருக்கும்போது தற்செயலாக தடை செய்யப்பட்ட ஆபாச படத்தை பார்க்க நேர்ந்தது. பார்க்க கூடாதுதான், ஆனால், அதை சிறுது நேரம் பார்த்தேன். ஆனால் எனது குற்றம், மிகப் பெரிய குற்றம் என்னவென்றால், மற்றொரு சந்தர்ப்பத்தில் நான் இரண்டாவது முறையாக பார்த்தேன். அது வேண்டுமென்றே செய்தேன். அறையின் ஓரத்தில் வாக்களிக்கக் காத்து கொண்டிருக்கும்போது ஆபாச படத்தை பார்த்தேன்" என்றார்.
அந்த நேரத்தில், உங்களுக்கு என்ன தோன்றியது என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "அந்த தருணத்தில் பித்து பிடித்தவன் போல் உணர்ந்தேன். நான் செய்வதைப் பற்றி நான் பெருமைப்படவில்லை. சுற்றியிருப்பவர்கள் அதைப் பார்ப்பார்கள் என்று நினைக்கவில்லை.
நான் செய்ததை நான் நியாயப்படுத்த போவதில்லை. நான் செய்தது முற்றிலும், முற்றிலும் தவறு. நான் என் உணர்வுகளை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன், என்றார்.
newstm.in