Theme Check

எம்.எஸ்.சுவாமிநாதன் மனைவி காலமானார்.. முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!

எம்.எஸ்.சுவாமிநாதன் மனைவி காலமானார்.. முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!

எம்.எஸ்.சுவாமிநாதன் மனைவி காலமானார்.. முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!
X

வேளாண் ஆய்வறிஞர் எம்.எஸ்.சுவாமிநாதன் மனைவி மீனா சுவாமிநாதன் காலமானார். அவருடைய உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் மனைவியும், உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதனின் தாயாருமான மீனா சுவாமிநாதன் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேளாண் ஆய்வறிஞர் எம்.எஸ்.சுவாமிநாதன் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது மனைவி மீனா சுவாமிநாதன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதுகுறித்து இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், “வேளாண் ஆய்வறிஞர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் மீனா சுவாமிநாதன் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து வருந்தினேன்.

சிறந்த கல்வியாளராகவும், பன்முகத்தன்மையாளராகவும் விளங்கிய அவரது மறைவு ஈடுசெய்ய முடியாதது. அவரது மறைவால் வாடும் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Next Story
Share it