Theme Check

வரும் 5 ஆம் தேதி பட்டியலை ரிலீஸ் செய்யும் அண்ணாமலை... கலக்கத்தில் திமுக..!!

வரும் 5 ஆம் தேதி பட்டியலை ரிலீஸ் செய்யும் அண்ணாமலை... கலக்கத்தில் திமுக..!!

வரும் 5 ஆம் தேதி பட்டியலை ரிலீஸ் செய்யும் அண்ணாமலை... கலக்கத்தில் திமுக..!!
X

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், பிரதமர் மோடியின் 8 வருட சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது: “8 வருடங்கள் முடிந்து விட்டது. ஆனால், எந்த ஒரு அமைச்சர் மீதாவது ஊழல் புகார் சொல்ல முடியுமா..? முடியாது.

2019-ம் ஆண்டில் நம் பிரதமர் மோடி, வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்பு ஏற்படுத்தினார். இந்தத் திட்டம் கொண்டு வந்த பிறகு கடந்த 3 வருடங்களில் 17 சதவீதமாக இருந்த தமிழ்நாடு இபபோது 37 சதவீதமாக உள்ளது.
meatting | தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை 5-ந் தேதி வெளியிடுவோம்
நீங்கள் 70 வருடங்களாக செய்த சாதனையை பிரதமர் மோடி ஒரே ஒரு திட்டத்தின் மூலம் 20 சதவீதம் உயர்த்தி இருக்கிறார். 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவதற்குள் அதை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பதற்காக வேலை செய்து வருகிறோம்.

இந்த 8 வருடங்களில் நாடு முழுவதும் 11 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது. 70 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் 5.5 கோடி கழிவறைகளை மட்டுமே கட்டி உள்ளனர்.

ஆனால் பிரதமர் மோடி ஆட்சியில் மொத்தமாக 16.5 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 56 லட்சம் கழிவறைகளை ஸ்வச் பாரத் திட்டத்தின் மூலம் மத்திய அரசு கட்டியுள்ளது.

மாநில திமுக அரசு அவற்றை தங்களது திட்டமாக ஸ்டிக்கர் ஒட்டி வெளியிட்டு தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது. ஊழல் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இவற்றை முன்னிறுத்தி திமுக ஆட்சி நடத்தி வருகிறது.

சென்னையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட படுகொலைகள் நடைபெற்றுள்ளன. சென்னையில் எப்போதாவது இப்படி எல்லாம் நடந்து இருக்கிறதா..? சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்வது..?

திமுக அமைச்சர்கள் சிலர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அமைச்சரின் ஊழல் குறித்த பட்டியலை வரும் 5-ம் தேதி மதுரையில் வெளியிட உள்ளோம்.திமுக தலைமையிலான அரசு மக்களை சுரண்டி எவ்வாறு செயல்படுகிறது என்பதை வரும் 5-ம் தேதிக்கு மேல் தமிழக மக்களே கண்கூடாக பார்ப்பார்கள். வரும் 15-ம் தேதி. ஆளுநரிடம் 700 பக்க திமுக ஊழல் குறித்த புத்தகம் வழங்கப்பட உள்ளது” என்றார்.

Next Story
Share it