Theme Check

மதுரையில் பரபரப்பு.. பிரபல பன் புரோட்டா கடைக்கு சீல்..!

மதுரையில் பரபரப்பு.. பிரபல பன் புரோட்டா கடைக்கு சீல்..!

மதுரையில் பரபரப்பு.. பிரபல பன் புரோட்டா கடைக்கு சீல்..!
X

மதுரை மாவட்டம் சாத்தமங்கலத்தில் ‘மதுரை பன் புரோட்டா’ எனும் பெயரில் கடை ஒன்று உள்ளது. பிரபலமான இந்த கடையில் நாள்தோறும் ஏராளமான வாடிக்கையாளர்கள் புரோட்டா சாப்பிடுவது வழக்கம்.

இந்நிலையில், இந்த கடையில் சுகாதாரமற்ற முறையில் புரோட்டா மற்றும் உணவுகள் தயார் செய்து விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக புகார் வந்துள்ளது.

இதையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று ‘மதுரை பன் புரோட்டா’ கடையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தரமற்ற முறையில் புரோட்டா தயார் செய்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மதுரையில், பிரபல புரோட்டா கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
Share it