Theme Check

மனைவியை விவாகரத்து செய்த கணவர் - காரணம் மேகி நூடுல்ஸ்..?

மனைவியை விவாகரத்து செய்த கணவர் - காரணம் மேகி நூடுல்ஸ்..?

மனைவியை விவாகரத்து செய்த கணவர் - காரணம் மேகி நூடுல்ஸ்..?
X

மைசூரைச் சேர்ந்த வாலிபருக்குச் சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. திருமணம் ஆன நாளில் இருந்து இவர்கள் வாழ்க்கை சந்தோசமாக தான் சென்றது. ஆனால் ஒரு மேகி நூடுல்ஸ் இவர்களின் வாழ்க்கையில் எமனாக வரும் என இவர்கள் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள்

திருமணம் நடந்த நாளிலிருந்து மேகி நூடுல்ஸ் மட்டுமே இவர் மனைவி சமைத்துக் கொடுத்துள்ளார். இவரும் அதை பெருசாக எடுத்து கொள்ளவில்லை. தினமும் கணவருக்கு மேகி நூடுல்ஸ் மட்டுமே சமைத்துள்ளார்.முதலில் அவர் மனைவிக்குச் சமைக்கத் தெரியவில்லை. பின்னர் போகப் போக கற்றுக்கொள்வார் என நினைத்துள்ளார்.

ஆனால் அவர் தொடர்ந்து காலை, மதியம், இரவு என மூன்று வேலையும் மேகி நூடுல்ஸ் மட்டுமே சமைத்துக் கொடுத்துள்ளார்.இதனால் கடுப்பான அவரது கணவர் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார். அவரது வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவர் சம்மதத்துடன் விவாகரத்து வழங்கியுள்ளது.

Next Story
Share it