இலங்கையில் இருந்து தப்பியோடினார் மகிந்த ராஜபக்சே.. கொதிப்புடன் தேடும் மக்கள் !!

இலங்கையில் இருந்து தப்பியோடினார் மகிந்த ராஜபக்சே.. கொதிப்புடன் தேடும் மக்கள் !!

இலங்கையில் இருந்து தப்பியோடினார் மகிந்த ராஜபக்சே.. கொதிப்புடன் தேடும் மக்கள் !!
X

இலங்கை முழுவதும் கொந்தளிப்பாக காணப்படும் சூழலில், பிரதமருக்கான அலரி மாளிகையில் இருந்து மகிந்த ராஜபக்சே வெளியேறினார். பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ராஜபக்சே சகோதரர்கள் பதவிவிலகக்கோரி மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதில் வன்முறை வெடித்து நாடு முழுவமும் பற்றி எரிகிறது.

ராஜபக்சே குடும்பத்தினர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீடுகளுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்து வருகின்றனர். தற்போது முன்னாள் பிரதமரான மகிந்த ராஜபக்சே தான் போராட்டக்குழுவினரின் இலக்காக உள்ளார். ஏனெனில் அவரது ஆதரவாளர்கள் நேற்று அமைதியாக போராட்டம் நடத்திய மக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தினர். இதனையடுத்தே அங்கு வன்முறை வெடித்துள்ளது.

voilance

இந்நிலையில் மகிந்த ராஜபக்சே, அவரது மனைவி, ஒரு மகன் மற்றும் குடும்பத்தினர் ஹெலிகாப்டர் மூலம் இன்று காலை திருகோணமலை கடற்படைத் தளத்தை வந்தடைந்தனர். அவர்கள் கடற்படைத் தளபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியிருப்பதாக கூறப்பட்ட நிலையில், கடற்படை தளத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

பல்வேறு போராட்டங்களால் இலங்கையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. திருகோணமலை கடற்படை முகாமிற்கு இரண்டு ஹெலிகாப்டர்கள் இன்று காலை வந்து சென்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு போலீஸ் மைதானத்தில் இருந்து ஹெலிகாபடர் ஒன்று சிலரை ஏற்றிக்கொண்டு அவசரமாக செல்லும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இது நமல் ராஜபக்சவின் உறவினர்களாக இருக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

voilance

இந்நிலையில் மகிந்த ராஜபக்சே, அவரது மனைவி சிராந்தி ராசபக்சே, மகன் ரோஹித ராஜபகசே மற்றும் ஜோன்சன் பெர்னாண்டோ ஆகியோர் திருகோணமலை கடற்படை முகாமிலிருந்து ஜெட் படகில் சோபர் தீவுக்கு தப்பியோடிவிட்டதாக ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

மகிந்த ராஜபக்சசே குடும்பத்துடன் சோபர் தீவில் உள்ள ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக ஆடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆடியோவில் பேசிய நபர் யார் என்பது குறித்தும், அவர் கூறிய தகவல்களின் உண்மை தன்மை குறித்தும் விவரம் ஏதும் தெரியவில்லை.


newstm.in

Tags:
Next Story
Share it