Theme Check

மனிதாபிமான அடிப்படையில் உதவிய ஸ்டாலினுக்கு நன்றி - மகிந்த ராஜபக்சே..!!

மனிதாபிமான அடிப்படையில் உதவிய ஸ்டாலினுக்கு நன்றி - மகிந்த ராஜபக்சே..!!

மனிதாபிமான அடிப்படையில் உதவிய ஸ்டாலினுக்கு நன்றி - மகிந்த ராஜபக்சே..!!
X

இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கை மக்களுக்கு உதவ முன்வந்ததற்கு நன்றி தெரிவித்து இலங்கை பிரதமர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 'தமிழக சட்டப்பேரவையில் தாங்கள் கொண்டுவந்த தனித தீர்மானத்தின்படி இலங்கையில் தற்போது நிலவி, வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று தாங்கள் அறிவித்துள்ளமை தங்களது நல்லெண்ணத்தைக் குறித்து நிற்கின்றது

இலங்கைப் பொருளாதார நெருக்கடியை அண்டை நாட்டுப் பிரச்சினையாகப் பார்க்காது மனிதாபிமான அடிப்படையில் நோக்கும் தங்களிற்கும், தமிழ்நாடு மாநில அரசிற்கும் இலங்கை மக்கள் சார்பாக மிகுந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.' என அந்தக் கடித்தத்தில் தெரிவித்துள்ளார்.
Next Story
Share it