ஆண்களின் வழுக்கையை கேலி செய்வதும் பாலியல் குற்றம்.. பரபரப்பு தீர்ப்பு !!
ஆண்களின் வழுக்கையை கேலி செய்வதும் பாலியல் குற்றம்.. பரபரப்பு தீர்ப்பு !!

ஆண்களின் வழுக்கையை கேலி செய்வது பாலியல் குற்றம் என்று தொழிலாளா் தீா்ப்பாயம் அதிரடியாக தீர்ப்பு அறிவித்துள்ளது.
ஆண்களில் பலருக்கும் வழுக்கை தலை ஏற்படுவதும் இயல்பாகிவிட்டது. அதுவும் முன்பைவிட இப்போது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு அவர்களின் உணவு பழக்கம், உடல்சக்தி ஒருகாரணியாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பல நிறுவனங்களில் வழுக்கை தலையுடன் பணியாளர்கள் கேலி செய்யப்படுவது நிகழ்ந்து வருகிறது. சிலர் சாதாரணமாக எடுத்துக்கொண்டாலும் பல இடங்களில் இதனால் பெரும் பிரச்சனை ஏற்படுகிறது.
இந்த நிலையில், பிரிட்டனில் தனியாா் நிறுவனம் ஒன்றிலிருந்து கடந்த ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியா் டோனி ஃபின், அந்த நிறுவன உயரதிகாரி தன்னை வழுக்கை என்று கேலி செய்தார். இதற்கு தான் எதிா்ப்பு தெரிவித்ததால் நியாயமற்ற முறையில் பணி நீக்கப்பட்டதாகவும் அங்குள்ள தீா்ப்பாயத்திடம் முறையிட்டிருந்தாா்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், பணியிடத்தில் பெண்களின் உறுப்புகளை கேலி செய்வது பாலியல் குற்றம் என்பதைப் போல், ஆண்களின் வழுக்கையை கேலி செய்வதும் பாலியல் குற்றத்துக்குள் அடங்கும்; எனவே, அதன் அடிப்படையில் டோனி ஃபின்னுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீா்ப்பளித்தனா்.
newstm.in