தினமும் அரை லிட்டர் பால் கறக்கும் ஆண் ஆடு! ஆச்சர்யத்தில் மக்கள்..!!
தினமும் அரை லிட்டர் பால் கறக்கும் ஆண் ஆடு! ஆச்சர்யத்தில் மக்கள்..!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள நரேகல் கிராமத்தைச் சேர்ந்தவர் சாதிக் மகந்தர். இவர் தனது வீட்டில் ஒரு ஆண் ஆட்டை வளரத்து வருகிறார். ஒரு வயது 6 மாதமான ஆண் ஆடு ஒரு நாளைக்கு அரை லிட்டர் பால் கொடுக்கிறது.

சாதிக் இரண்டு ஆட்டை வளர்த்து வந்த நிலையில், பெண் ஆட்டுக்குட்டி இறந்து விட்டது. மீதம் இருந்த ஆண் குட்டி இப்போது பால் கொடுத்து வருகிறது. சுல்தான் என்று பெயரிடப்பட்ட, ஆண் ஆடு பால் கறப்பதைக் கண்டு, சுற்றுவட்டார கிராம மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஆடு உரிமையாளர் சாதிக் மகந்தர் கூறுகையில், “இந்த ஆண் ஆட்டுக்குட்டியை எல்லா ஆடுகளையும் போல் பார்த்துக் கொண்டோம். நாங்கள் ஒவ்வொரு நாளும் முழு தானியங்கள் மற்றும் காய்கறிகளை இந்த ஆட்டுக்குட்டிக்கு கொடுத்து வருகிறோம்” என்று கூறினார்.

இதுகுறித்து கால்நடை மருத்துவர்களிடம் கேட்டபோது, “இதுபோன்ற வழக்குகள் மிகவும் அரிதானவை. சில ஹார்மோன்களின் சுரப்பு மிகவும் குறைவாக இருக்கும் போது ஆண் விலங்குகள் பால் கறக்கின்றன.” என்று கூறினர்.
Next Story

