Theme Check

வண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் பலி.. 6 மாதத்தில் 7 விலங்குகள் உயிரிழப்பு ஏன்?

வண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் பலி.. 6 மாதத்தில் 7 விலங்குகள் உயிரிழப்பு ஏன்?

வண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் பலி.. 6 மாதத்தில் 7 விலங்குகள் உயிரிழப்பு ஏன்?
X

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம், உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானது.

சென்னை வண்டலூரில் உள்ளது அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா. இங்கு, சிங்கம், புலி, கரடி உள்ளிட்ட பல்வேறு அரியவகை உயிரினங்கள், பறவையினங்கள் பாதுகாப்புடன் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த 2000ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி சிறு பூங்காவிலிருந்து 10 வயதில் மீட்கப்பட்ட மணி என்ற ஆண் சிங்கம், வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டது.

இதனை தொடர்ந்து, வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு, மீட்பு மற்றும் புனர்வாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த ஆண் சிங்கம் நேற்று அதிகாலை உடல்நலக் குறைவினால் பலியானது என பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

vandalur-zoo

தற்போது 32 வயதான இந்த ஆண் சிங்கம், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு நேற்று காலை சிகிச்சை் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. பூங்கா டாக்டர்கள் உயிரிழந்த சிங்கத்தின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனை செய்த பிறகு அடக்கம் செய்தனர்.

பூங்காவில் கடந்த 6 மாத காலத்தில் வெவ்வேறு காரணங்களால் 7 விலங்குகள் உயிரிழந்துள்ளது. 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 18 வயது சிறுத்தையும், மார்ச் மாதம் அகன்ஷா என்ற 13 வயது வெள்ளைப்புலியும், மே மாதம் 18 வயது டீனா என்ற வரிக்குதிரையும் உடல்நலக்குறைவால் உயிரிழந்தன. இதே மாதத்தில் பிறந்த சில நாட்கள் ஆன காட்டுக்கழுதை குட்டியும் உயிரிழந்தது.

vandalur-zoo

கடந்த சில தினங்களுக்கு முன்பு சாம்பார் மான், காட்டு மாடு, காட்டுப்பன்றி ஆகிய விலங்குகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 2021-ம் ஆண்டு கொரோனா உச்சமடைந்த காலக்கட்டத்தில் சிங்கம், புலி, நெருப்புக்கோழிகள், வெள்ளைப்புலி ஆகியவை உயிரிழந்துள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு விலங்குகள் உடல்நலக்குறைவு மற்றும் நோய் தொற்று காரணமாக உயிரிழந்து வருவது பொதுமக்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it