Theme Check

டார்கெட் முடிக்க ஆண்களுக்கு கட்டாய குடும்பக் கட்டுப்பாடு!!

டார்கெட் முடிக்க ஆண்களுக்கு கட்டாய குடும்பக் கட்டுப்பாடு!!

டார்கெட் முடிக்க ஆண்களுக்கு கட்டாய குடும்பக் கட்டுப்பாடு!!
X

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மதுவிற்கு அடிமையானவர்களை வலுகட்டயமாக அழைத்து சென்று குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதாக புகார் எழுந்துள்ளது.

வேம்பார் சிந்தமணி நகரைச் சேர்ந்த முத்துச்சேர்மன் கடந்த மாதம் 25ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த விறகு வெட்டும் வேலை உள்ளது என்று அவரை அழைத்துச்சென்றனர். ஆனால் சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து அவருக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துவிட்டதாக மனைவி பஞ்சவர்ணத்திடம் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் கொடுத்ததாக ரூ 1,100க்கு காசோலையும் கொடுத்தார். பஞ்சவர்ணம் மற்றும் அவரது உறவினர்கள், ஒரு வழக்கறிஞர் உதவியுடன் சம்பந்தபட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவரிடம் கேட்ட போது,முத்துசேர்மன் சம்மதத்துடன் குடும்பக்கட்டுப்பாடு செய்துள்ளதாகவும், விண்ணப்பத்தில் அவர் கைநாட்டு வைத்துள்ளதாகவும் பதில் கூறினர்.

operation-theatre

இதையெடுத்து பஞ்சவர்ணம் குடும்பத்தினர் அனுமதியில்லாமல் வலுக்கட்டயமாக அழைத்து சென்று குடும்பக்கட்டுபாடு செய்துள்ளதாகவும், ஏமாற்றி அழைத்து சென்ற சூறாவளி, முனியசாமி, கலசலிங்கம், செல்வராஜ் கணேசன் ஆகிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த 28ஆம் தேதி புகார் அளித்தனர். ஆனால் தற்பொழுது வரை போலீசார் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும், புகாரை வாபஸ் பெற வலியுறுத்தி பஞ்சவர்ணம் குடும்பத்தினருக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவதாகவும். கூடுதல் பணம் தருவதாகவும், பிரச்னையை விடுங்கள் என்று கூறுவதாக கூறப்படுகிறது. மதுவிற்கு அடிமையானவர்கள், சற்று மனரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் என அப்பாவி ஆண்களை குறிவைக்கும் இந்த கும்பல் அவர்களிடம் நைசாக பேசி அழைத்து சென்று குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து வருவதாக கூறப்படுகிறது.

operation-theatre

இதற்கு என்று புரோக்கர்கள் இருப்பதாகவும், நரிப்பையூரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த செல்பவர்களை கண்காணித்து புரோக்கர்கள் ஆள்களை பிடித்து செல்வதாகவும், அப்பிரச்னை குறித்து, தன்னுடைய மேல் அதிகாரிக்கும், சம்பந்தபட்ட அரசு மருத்துவமனைக்கு தகவல் கொடுத்துள்ளதாகவும் வேம்பார் பகுதி சுகாதார ஆய்வாளர் பாலகண்ணன் தெரிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it