முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் மநீம தலைவர் கமல்ஹாசன்..!
முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் மநீம தலைவர் கமல்ஹாசன்..!

பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், முதல்வர் மு.க.ஸ்டாலினை அவருடைய வீட்டில் சந்தித்து பேசினார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பஹத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா, காயத்ரி, செம்பன் வினோத் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ள இப்படம் வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
படம் வெளியாகி 11 நாட்கள் கடந்து விட்ட நிலையில், உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருகிறது. படம் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், அண்மையில் நடிகர் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்தார் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி.
இந்நிலையில், ‘விக்ரம்’ பட வெற்றிக்காக, மரியாதை நிமித்தமாக, முதல்வர் ஸ்டாலினை நேற்று கமல் சந்தித்து பேசினார். படத்தின் இணை தயாரிப்பாளர் ஆர்.மகேந்திரனும் உடனிருந்தார்.
முன்னதாக, ‘விக்ரம்’ திரைப்படம் வெளியான முதல் 3 நாட்களுக்கு சிறப்பு காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.