Theme Check

திருமண சான்றிதழ்.. எளிமையாக்கிய தமிழக அரசு !!

திருமண சான்றிதழ்.. எளிமையாக்கிய தமிழக அரசு !!

திருமண சான்றிதழ்.. எளிமையாக்கிய தமிழக அரசு !!
X

திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் தம்பதியர், தங்களின் திருமணத்தைப் பதிவு செய்துகொள்வது 2009-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட், விசா பெறுவது முதல் பல்வேறு விஷயங்களுக்கும் திருமண பதிவுச் சான்றிதழ் அவசியம் என்பதால், திருமணமான ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தைப் பதிவு செய்யத் தவறக் கூடாது. திருமணப் பதிவு குறித்து ஏற்கெனவே ஒவ்வொரு மதத்துக்கும் ஏற்றவாறு சட்டங்கள் இருக்கின்றன. அத்துடன் சிறப்புத் திருமணச் சட்டமும் இருக்கிறது. இந்தச் சட்டங்களின் அடிப்படையில்தான் திருமணங்கள் பதிவு செய்யப்படும். இந்தப் பதிவானது விருப்பத்தின் அடிப்படையில் இருந்ததை, தற்போதைய 2009-ம் ஆண்டு சட்டம் கட்டாயமாக்கியுள்ளது

marriage

திருமண சான்றிதழ் மற்றும் சிறப்பு திருமணம் செயல்கள் படி, மாவட்ட திருமணம் பதிவாளர் மூலம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், திருமண சான்றிதழை இணைய தளம் வழியாக திருத்தம் செய்யும் வசதியை அறிமுகம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

புதிய அரசாணையால் சான்றிதழில் திருத்தம் செய்வதற்கு இனி சார் பதிவாளர் அலுவலகம் செல்ல தேவையில்லை. திருமண சான்றிதழ் இணையத்தில் திருத்தம் செய்யும் வசதிக்காக ரூ. 6 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it