Theme Check

பிரபல வாஸ்து நிபுணர் குருஜி படுகொலை.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் !!

பிரபல வாஸ்து நிபுணர் குருஜி படுகொலை.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் !!

பிரபல வாஸ்து நிபுணர் குருஜி படுகொலை.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் !!
X

பிரபல வாஸ்து நிபுணர் சந்திரசேகர் குருஜி கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு ஒருவரை சந்திப்பதற்காக சென்றுள்ளார். அங்கு வரவேற்பு அறையில் காத்திருந்தபோது, பட்டப்பகலில் அவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் படுகொலை செய்யப்படும் காட்சிகள் ஹோட்டல் வரவேற்பறையில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், சந்திரசேகர் குருஜி வரவேற்பறையில் நடந்து வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதன்பிறகு, அங்கு அவருக்காக காத்திருக்கும் இருவரை அவர் சந்திக்கிறார். அப்போது அங்கிருக்கும் சோஃபாவில் அமர்ந்த அவரது காலில் விழுந்து ஒருவர் ஆசிர்வாதம் வாங்குகிறார். அப்போது தீடீரென மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் அவர்கள் இருவரும் சந்திரசேகர் குருஜியை சரமாரியாக குத்துகின்றனர்.

vasthu murder

இதில் நிலைகுழைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த சந்திரசேகர் குருஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விடுகிறார். முன்னதாக, அங்கிருந்தவர்கள் கொலைகாரர்கள் அருகே ஓடி வருகின்றனர். ஆனால், அவர்கள் தங்களது ஆயுதங்களால் அவர்களை மிரட்டியதும், அவர்கள் பின்வாங்கி விடுகின்றனர். பின்னர், குருஜியை கொலை செய்து விட்டு அங்கிருந்து தலைமறைவாகி விடுகின்றனர். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருக்கும் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சந்திரசேகர் குருஜியின் சடலத்தை கைபற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவியில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


newstm.in

Tags:
Next Story
Share it