அதிகமாக மயக்க மருந்து செலுத்திக் கொண்டு மருத்துவ மாணவி தற்கொலை!!

அதிகமாக மயக்க மருந்து செலுத்திக் கொண்டு மருத்துவ மாணவி தற்கொலை!!

அதிகமாக மயக்க மருந்து செலுத்திக் கொண்டு மருத்துவ மாணவி தற்கொலை!!
X

அளவுக்கு அதிகமாக மயக்கமருந்து செலுத்திக் கொண்டு மருத்துவ மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரியில் 27 வயது மருத்துவ மாணவி, முதுநிலை மயக்கவியல் பட்டப் படிப்பு படித்து வந்தார்.

இவர் கடந்த இரண்டு நாட்களாக மருத்துவ பணியில் இருந்த நிலையில், நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்டார். தொலைபேசியில் அழைத்தும் வெகுநேரம் இவர் ஃபோனை எடுக்கவில்லை.

Death

இதனையடுத்து சக மாணவிகள் விடுதி அறைக்கு சென்று பார்த்தபோது, அவர் மயக்கமான நிலையில் கிடந்தார். உடனடியாக மாணவிகள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அளவுக்கு அதிகமாக மயக்கு மருந்து எடுத்துக் கொண்டதால் அவரை காப்பாற்ற முடியவில்லை. அவரது அறையில் இருந்து தற்கொலை கடிதம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாழ்க்கை மீது ஏற்பட்ட வெறுப்பு காரணமாக அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தற்கொலைக்காக காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it