Theme Check

மக்களை தேடி மருத்துவ வாகன சேவை.. தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!

மக்களை தேடி மருத்துவ வாகன சேவை.. தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!

மக்களை தேடி மருத்துவ வாகன சேவை.. தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!
X

சென்னை மெரினாவில் இன்று, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, 70 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 389 நடமாடும் மருத்துவ வாகன சேவை திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் கிராமங்களுக்கு மருத்துவ சேவை வழங்க நடமாடும் மருத்துவமனை சேவைக்காக வாங்கப்பட்டுள்ள வாகனங்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளன. இதில், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணியில் இருப்பர்.

இந்த நடமாடும் மருத்துவக் குழுவினர், மலை கிராமங்கள் உட்பட அனைத்து பகுதிகளுக்கும் சென்று மருத்துவ சேவை வழங்குவதுடன், சுழற்சி முறையில் சென்று சுகாதார சேவை வழங்குவார்கள்.

இதன்மூலம், தமிழகம் முழுவதும் 80,000 கிராமங்களில் மருத்துவ வாகனம் மூலம் மாதந்தோறும் 40 மருத்துவ முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நடமாடும் மருத்துவமனையில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் பரிசோதனை மற்றும் இதர அத்தியாவசிய மருத்துவ சேவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it