Theme Check

மெகா தடுப்பூசி முகாம் ரத்து.. அமைச்சர் சுப்பிரமணியன் அறிவிப்பு..!

மெகா தடுப்பூசி முகாம் ரத்து.. அமைச்சர் சுப்பிரமணியன் அறிவிப்பு..!

மெகா தடுப்பூசி முகாம் ரத்து.. அமைச்சர் சுப்பிரமணியன் அறிவிப்பு..!
X

தமிழகத்தில் ஒவ்வொரு வாரமும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 22-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாம்களில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தாத அனைவரும் தவறாமல் பங்கேற்க அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது என்பது குறிப்பிடப்படுகிறது.

இதனிடையே, தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கு வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக தமிழகத்தில் வரும் 19-ம் தேதி பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் சனிக்கிழமை (19ம் தேதி) 23வது தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்படுவதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Next Story
Share it