மீம்ஸ், போஸ்டர்கள்... மக்கள் இயக்கத்தினருக்கு விஜய் எச்சரிக்கை !!

மீம்ஸ், போஸ்டர்கள்... மக்கள் இயக்கத்தினருக்கு விஜய் எச்சரிக்கை !!

மீம்ஸ், போஸ்டர்கள்... மக்கள் இயக்கத்தினருக்கு விஜய் எச்சரிக்கை !!
X

அரசியல் கட்சித் தலைவர்கள், அரசுப் பதவியில் உள்ளவர்களை இழிவுபடுத்தும் வகையில் போஸ்டர்கள், மீம்ஸ், இணையப் பதிவு போன்றவற்றை செய்யக் கூடாது என்று ரசிகர்களுக்கு விஜய் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருப்பவர் விஜய். சினிமாவைக் கடந்து விஜய் பேசும் அரசியல் கருத்துகளுக்கு பரபரப்பு அதிகமாக இருக்கும். விஜய், அவரது ரசிகர்களை ஒருங்கிணைத்து விஜய் மக்கள் இயக்கம் என்ற இயக்கத்தை நடத்திவருகிறார். அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மக்கள் நற்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.

அதேபோல, தமிழ்நாட்டில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும், நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட்டது. விஜய் நேரடியாக பிரச்சாரத்தில் ஈடுபடாமல் அவரது பெயரைக் கொண்டு போட்டியிட்ட மக்கள் இயக்கம் சில இடங்களில் வெற்றியும் பெற்றது.

vijay

இந்தநிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் அறிவுரையில் வெளியிடப்பட்ட அறிக்கை என்று குறிப்பிடப்பட்டிருக்கும் அதில், அரசுப் பதவிகளில் உள்ளோர்களை, அரசியல் கட்சித் தலைவர்களை, மற்றும் யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் பத்திரிகைகளில , இணையதளங்களில், போஸ்டர்களில் என எந்த தளத்திலும் எழுதவோ, பதிவிடவோ, மீம்ஸ் உள்ளிட்ட எதனையும், இயக்கத்தினர் வெளியிடக் கூடாது.

vijay

இது நம் விஜய்யின் கடுமையான உத்தரவின்பேரில், ஏற்கெனவே பலமுறை இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு அறிவுறுத்தி இருந்தோம். அதனை மீறுவோர் மீது நடவடிக்கைகள் மேற்கொண்டதோடு, இயக்கத்தை விட்டு நீக்கியும் உள்ளோம்.

இருப்பினும், நம் விஜய் அறிவுறுத்தலை, மீண்டும் யாரேனும் மீறினால் இனி அவர்களை இயக்கத்தைவிட்டு நீக்குவதோடு, அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை விஜய் உத்தரவின் பேரில் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு தெரியப்படுத்திக்கொள்கிறேன், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


newstm.in

Tags:
Next Story
Share it