இனி பெண்களுக்கு மாதத்திற்கு 3 நாட்கள் மாதவிடாய் விடுமுறை..!!
இனி பெண்களுக்கு மாதத்திற்கு 3 நாட்கள் மாதவிடாய் விடுமுறை..!!

பெண்களுக்கு மாதத்திற்கு 3 நாட்கள் மாதவிடாய் விடுமுறை அளிக்க ஸ்பெயின் அரசு முடிவு செய்துள்ளது.
மாதவிடாய் என்பது ஒவ்வொரு பூப்படைந்த பெண்ணும் சந்திக்க கூடிய இயற்கையான சுழற்சி முறையாகும். மாதந்தோறும் கருப்பையில் சேமிக்கப்படும் உதிரம், கரு சினையுராத பட்சத்தில் வெளியேற்றப்படுவதே மாதவிடாயாகும். இது மாதந்தோறும் 21லிருந்து 35 நாட்களுக்கு ஒருமுறை 3 அல்லது 7 நாட்கள் வரை நீடிக்க கூடியது.
அனேகமான பெண்களுக்கு மாதவிடாயின்போது வயிற்றின் கீழ் பகுதியில் தசைப்பிடிப்பு, மார்பக வலி, மார்பக வீக்கம், தலைவலி, தோள்மூட்டு வலி, மனச்சோர்வு, எரிச்சல் போன்ற உடல் உபாதைகள் அறிகுறிகளாக தோன்றுகின்றன. இதோடு கடுமையான மன அழுத்ததிற்கும் பெண்கள் ஆளாவதுண்டு.
இந்நிலையில், அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு மாதத்திற்கு 3 நாட்கள் மாதவிடாய் விடுமுறையை அளிக்க ஸ்பெயின் அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மாதவிடாய் விடுமுறை அளிக்கும் முதல் ஐரோப்பிய நாடு என்ற பெருமையை ஸ்பெயின் பெற்றுள்ளது.

