Theme Check

மாதவிடாய் வலியால்… இப்படி ஒரு சோகம்!!

மாதவிடாய் வலியால்… இப்படி ஒரு சோகம்!!

மாதவிடாய் வலியால்… இப்படி ஒரு சோகம்!!
X

மாதவிடாய் காலத்தில் ஏற்பட்ட வலி காரணமாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் சீனா வீராங்கனை கின்வென் செங் நான்காவது சுற்றோடு வெளியேறியுள்ளார்.

மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான நான்காவது சுற்றில் டென்னிஸ் உலகின் நம்பர் 1 வீராங்கனையான போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக் (Iga Swiatek)-க்கு எதிராக செங் விளையாடினார்.

முதல் செட் முடிந்த நிலையில் இரண்டாவது செட்டின்போது அவருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவ ரீதியான டைம்-அவுட் எடுத்துக் கொண்டார். இருந்தாலும் அவரால் ஆட்டத்தில் வெற்றி பெற முடியவில்லை. தோல்விக்கு பிறகு அவர் உருக்கமாக சில விஷயங்களைப் பகிர்ந்தார்.

zheng

எனக்கு காலில் வலி இருந்தது. இருந்தாலும் எனக்கு ஏற்பட்ட வயிற்று வலியுடன் ஒப்பிடும்போது அது பெரிய வலி இல்லை. அந்த வலியுடன் என்னால் விளையாட முடியவில்லை. இது பெண்களின் விஷயம். மாதவிடாய் காலங்களில் முதல் நாள் மிகவும் கடினமானது. அதுவும் இயல்பாகவே முதல் நாளன்று எனக்கு வலி சற்று அதிகம் இருக்கும்.

டென்னிஸ் கோர்ட்டில் நான் விளையாடியபோது நான் ஆணாக இருந்திருக்கலாம் என அந்த தருணம் எண்ணினேன். அப்படி இருந்திருந்தால் இது மாதிரியான பாதிப்புகளுக்கு நான் ஆளாகி இருக்க வேண்டியதில்லை. நிச்சயம் அடுத்த முறை சிறப்பாக தயாராகி அவருக்கு எதிராக விளையாட நான் ஆவலோடு உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it