Theme Check

கணித தேர்வுக்கு கருணை மதிப்பெண்.. அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்..!

கணித தேர்வுக்கு கருணை மதிப்பெண்.. அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்..!

கணித தேர்வுக்கு கருணை மதிப்பெண்.. அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்..!
X

இதுவரை நடந்த தேர்வுகள் பெரிய அளவில் மாணவர்களுக்கு கடினமாக இருக்கவில்லை. ஆனால், நேற்று (24-ம் தேதி) நடந்த பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான கணக்கு பாடத் தேர்வு கண்ணீரை வர வைத்து விட்டதாக ஆசிரியர்களே குமுறுகின்றனர்.

இந்நிலையில், சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் 23 வகையான சான்றிதழ்களை இணையதளம் வழியாக வழங்கும் திட்டம் மற்றும் வரும் கல்வியாண்டிற்கான நாட்காட்டி, ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்ட காலாண்டு நாட்காட்டி உள்ளிட்டவற்றை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டு தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், “நேற்று நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணித பாடத்தில் பாடத்திட்டத்தை தாண்டிய கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு அறிவிக்கப்படும். என்று கூறினார்.
Next Story
Share it