Theme Check

100 அடியை எட்டியது மேட்டூர் அணையின் நீர்மட்டம்!!

100 அடியை எட்டியது மேட்டூர் அணையின் நீர்மட்டம்!!

100 அடியை எட்டியது மேட்டூர் அணையின் நீர்மட்டம்!!
X

கர்நாடகா மாநிலத்தில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கடந்த 8ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு கடந்த 2 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.

நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 98 அடியாக இருந்தது. இந்த நிலையில், காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 100 அடியை எட்டியுள்ளது.

mettur

அணைக்கு 50 ஆயிரம் கன அடிநீர் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு 12,000 கன அடியில் இருந்து15,000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

நீர்இருப்பு 65.41 டிஎம்சியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணை வரலாற்றில் 68ஆவது ஆண்டாக அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Next Story
Share it