Theme Check

நடுத்தர மக்கள் மீண்டும் ஏமாற்றம்.. மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் விமர்சனம்..!

நடுத்தர மக்கள் மீண்டும் ஏமாற்றம்.. மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் விமர்சனம்..!

நடுத்தர மக்கள் மீண்டும் ஏமாற்றம்.. மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் விமர்சனம்..!
X

பாராளுமன்றத்தில் இன்று 2022 - 2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் 5 ஜி வசதி, டிஜிட்டல் கரன்சி, ஒரே நாடு - ஒரே பத்திரப்பதிவு, வருமான வரி உச்ச வரம்பு, நெடுஞ்சாலை திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், சம்பளம் வாங்கும் நடுத்தர மக்களுக்கு மத்திய பட்ஜெட் துரோகம் இழைப்பதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், பிரதமர் நரேந்திர மோடியும் நாட்டின் சம்பளக்காரர்கள் மற்றும் நடுத்தர வகுப்பினருக்கான எந்த நிவாரணத்தையும் அறிவிக்காமல் துரோகம் இழைத்துள்ளனர்.

ஊதியக் குறைப்பு மற்றும் உயர் பணவீக்கம் காரணமாக சம்பளம் பெறுவோர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். முழு ஊதியக் குறைப்பு மற்றும் பணவீக்கத்தை முறியடிக்க சம்பளம் வாங்குவோர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் நிவாரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

பிரதமரும், மத்திய நிதியமைச்சரும் தங்கள் நடவடிக்கைகள் மூலம் அவர்களை மீண்டும் ஏமாற்றியுள்ளனர். இது இந்தியாவின் சம்பளம் பெறும் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு செய்யும் துரோகம்” என்று தெரிவித்தார்.

Next Story
Share it