மாணவர்களுக்கு வாரம் இருமுறை பால்.. மாநில அரசு அதிரடி அறிவிப்பு..!
மாணவர்களுக்கு வாரம் இருமுறை பால்.. மாநில அரசு அதிரடி அறிவிப்பு..!

ராஜஸ்தானில், அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் பால் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்த முயற்சியின் மூலம் குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவு அதிகரிப்பதோடு, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் வருகை விகிதம் அதிகரிக்கும் என்று அரசு நம்புவதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் படிக்கும் சுமார் 69.21 லட்சம் மாணவர்களுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பவுடரில் தயாரிக்கப்பட்ட பால் வழங்கப்படும் என்று கூடுதல் தலைமைச் செயலர் (கல்வி) பவன் குமார் கோயல் தெரிவித்தார்.
இந்த நாட்கள் விடுமுறை என்றால் அடுத்த கல்வி நாளில் பால் வழங்கப்படும். 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 150 மில்லி பாலும், 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 200 மில்லி பாலும் வழங்கப்படும்.
இதற்காக, ராஜஸ்தான் கூட்டுறவு பால் பண்ணை கூட்டமைப்பிலிருந்து பால் பவுடர் கொள்முதல் செய்யப்படும் என்றும் கோயல் தெரிவித்தார்.

