Theme Check

நின்றிருந்த லாரி மீது மோதிய மினி டெம்போ.. பெண் உட்பட 4 பேர் உடல்நசுங்கி பலி !

நின்றிருந்த லாரி மீது மோதிய மினி டெம்போ.. பெண் உட்பட 4 பேர் உடல்நசுங்கி பலி !

நின்றிருந்த லாரி மீது மோதிய மினி டெம்போ.. பெண் உட்பட 4 பேர் உடல்நசுங்கி பலி !
X

புறவழிச்சாலையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மினி டெம்போ மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

சேலம் தம்மம்பட்டியைச் சேர்ந்த செல்வகுமார் (38) கற்பகவல்லி (27) மிதுன் (3) லிங்கேஸ்வரன் (28) உள்ளிட்ட 7 பேர் சீர்காழி அருகே உள்ள மாதானம் கிராமத்திற்கு மினி டெம்போவில் டைல்ஸ் ஏற்றிக் கொண்டு வந்துள்ளனர். அப்போது சிதம்பரம் புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் நின்றிருந்த லாரி மீது மோதி பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் மினி டெம்போவின் முன் பகுதி அப்படியே நொருங்கியது. இதனால், முன்பகுதியில் அமர்ந்து வந்த செல்வகுமார், கற்பகவல்லி, மிதுன், லிங்கேஸ்வரன் உள்ளிட்ட 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். அதேநேரத்தில் லாரியின் பின்னால் அமர்ந்திருந்த 3 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.

dsd

இதையடுத்து அருகில் இருந்தவர்கள், காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கி இறந்தவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்கு பதிந்து விசாரனை மேற்கொண்டுள்ளனர்.

விபத்தில் தொழிலாளிகள் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


newstm.in

Next Story
Share it