வீடு திரும்பினார் அமைச்சர் துரைமுருகன்..!
வீடு திரும்பினார் அமைச்சர் துரைமுருகன்..!

தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் இரண்டு நாள் பயணமாக துபாய் செல்ல இருந்தார். இதற்காக அவர் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு நேற்று காலை சென்றார்
அப்போது, அவருடைய விசாவில் பழைய பாஸ்போர்ட் எண் குறிப்பிடப்பட்டு இருந்ததால் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து, விசாவில் உள்ள பாஸ்போர்ட் எண்ணை மாற்றிய பிறகு அமைச்சர் துரைமுருகன் மாலை 6.50 மணியளவில் ஏர் இந்தியா விமானம் மூலம் துபாய் செல்ல இருந்த நிலையில், கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்துவிட்டு அவசரமாக வீடு திரும்பினார்.
இந்நிலையில், அமைச்சர் துரைமுருகனுக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

