Theme Check

ஊழல் அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை!!

ஊழல் அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை!!

ஊழல் அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை!!
X

அதிமுக ஆட்சியில் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஊழலில் ஈடுபட்ட அரசு அதிகாரிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி காட்பாடியை அடுத்துள்ள அம்முண்டி சர்க்கரை ஆலை பகுதியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு இடங்களில் முறைகேடுகள் நடந்துள்ளது என்றார்.

Durai

அம்முண்டியில் உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. அந்த முறைகேடுகளை முறையாக விசாரணை செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என கூறினார்.

இதை எச்சரிக்கையாவே கூறுகிறேன், அப்போது தான் இந்த ஆலை மீண்டும் நல்லபடியாக இயங்கும். காரணம் இந்த ஆலையை கொண்டு வந்தவன், நான். இதுவரை இந்த ஆலை நிர்வாகத்தில் தலையிட்டது இல்லை என்றார்.

Durai

சுத்தமாக இருந்த ஆலையில் கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த அதிகாரிகளால் முறைகேடு நடத்தப்பட்டுள்ளது. எனவே தற்போதுள்ள அதிகாரிகள் உஷாராக பணியாற்ற வேண்டுமென எச்சரித்தார்.

தோடர்ந்து பேசிய அவர், சேர்க்காடு பகுதியில் இந்த ஆண்டு அரசு கலைக்கல்லூரி கொண்டு வரப்படும். 100 படுக்கைகள் கொண்ட மிகப்பெரிய மருத்துவமனை பொன்னை பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு பணி விரைவில் துவங்கவுள்ளது என்று கூறினார்.

newstm.in

Next Story
Share it